இலங்கை வாழ் மக்களின் பாரம்பரிய மொழிகளுள் ஒன்று தமிழ் மொழியாகும். பல நூறாண்டுகளாக இம்மொழியானது எமது வரலாறு மற்றும் பண்பாட்டுடன் பின்னிப் பிணைந்துள்ளது. எமது நீண்டகால
அரசியல்ääபொருளாதாரம்ääகலாசார சமூக நடவடிக்கைகள் அனைத்தும் தமிழ் மொழியுடன் இணைந்து நெருங்கிய தொடர்புடனேயே இடம் பெற்று வந்துள்ளன. எவ்வாறாயினும் காலத்துக்குக் காலம் இனங்களுக்கிடையே ஏற்பட்ட விரும்பத்தகாத கருத்து முரண்பாடுகள் காரணமாக மக்களிடையே தப்பெண்ணமும் சகிப்புத்தன்மை இன்மையும் ஏற்பட்டது என்பது கசப்பான உண்மையாகும். இந்நிலைமைக்கான காரணமாகää பின்னணியில் மொழிப் பிரச்சினையும் இருந்ததால் சமூகங்களுக்கிடையில் புரிந்துணர்வினை ஏற்படுத்தும் ஆக்கபூர்வமான பொறுப்புடன் செயலாற்றும் நடவடிக்கைகளில் ஒன்றாக தமிழ் மொழி கற்பித்தலை இலங்கை மன்றக் கல்வி நிறுவகமானது மேற்கொண்டு வருகிறது. தமிழ் மொழி கற்பித்தலில் இருபது ஆண்டுகளுக்கு மேற்பட்ட சேவை என்ற அடிப்படையில் ஆயிரக்கணக்கானோருக்கு இதுவரை காலமும் தமிழ் கற்பித்த பெருமையை இலங்கை மன்றம் கொண்டுள்ளது.
தமிழ் மொழி கற்க விரும்புவோர் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் தமது தேவைக்கான மொழித்திறனை பெற்றுக் கொள்வதற்கு அமைவாக பாடத்திட்டத்தையும் பாடநூல்களையும் அமைத்து அவர்களிடம் மொழித் தேர்ச்சியினை ஏற்படுத்தும் பாடநெறிகள் பல இங்கு நடைமுறைப்படுத்தப் படுகின்றன. பாடநெறியின் முடிவில் தேர்வுகளும் நடத்தப்பட்டு சான்றிதழ்களும் வழங்கப்படுகின்றன. அடிப்படை மற்றும் இடைநிலைத் தமிழ்ப் பாடநெறியும் பேச்சுத் தமிழ் பாடநெறியும் தொடர்ந்து நடத்தப்படுகின்றன. இப்பாட நெறிகளைப் பூர்த்தி செய்பவர்கள் குறிப்பாக அரசாங்க சேவையாளர்கள் தமிழ் மொழியை பயன்படுத்தத் தேவையான தேர்ச்சியினைப் பெற்றுவிடுகின்றார்கள்.
இலங்கை அரசின் மொழிப்பயிற்சி நிகழ்ச்சித் திட்டத்தை பலப்படுத்தும் வகையில் இலங்கை மன்றம் மேற்கொண்டு வரும் பணி அளப்பரியதாகும்.
No comments:
Post a Comment